தற்போதைய செய்திகள்

ஈரோடு ராமபக்தர் ஆஞ்சனேயர் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

DIN

ஈரோடு: விஜயதசமி விழாவை முன்னிட்டு ஈரோடு ராமபக்தர் ஆஞ்சனேயர் கோவிலில் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.

விஜயதசமி விழாவில் சரஸ்வதி வழிபாடு நடக்கும். மாணவர்கள், கலைஞர்கள், இசை வல்லுனர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலைகளை கற்பிப்போர், கற்றுக் கொள்வோர் அனைவரும், தாங்கள் பயன்படுத்திய இசைக்கருவிகள், பேனா, நோட்டுப் புத்தகம் உள்ளிட்ட பொருட்களை, சரஸ்வதி தேவியின் படத்தின் முன் வைத்து லலிதாம்பிாக சகஸ்ரநாமம், 1008 அர்சசனை செய்து, தன், குருவின் திருவடி வணங்கி குருவின் ஆசியோடு பயிற்சியை தொடருவார்கள், புதியவர்கள் பயிற்சியை தொடங்கு வார்கள். கொரோனா பரவல் காரணமாக பலர் வீடுகளில் இருந்த படியே சரஸ்வதி தேவி வழிபட்டனர்.

சில இடங்களில் சிறு குழந்தைகளுக்கு கல்வியை புகட்டும்  வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.

அதில், ஈரோடு பழைய ரயில் நிலைய சாலையில் உள்ள ராமபக்தர் ஆஞ்சனேயர் கோவிலில், இந்து தர்ம வித்யா பீடம் சார்பில், வித்யாரம்பம் நிகழ்சி நடந்தது.

இதில், மூங்கில் முறத்தில் பரப்பிய பச்சரியில், மஞ்சள் கிழங்கு எழுத்தாணி கொண்டு, தமிழ் உயிரெழுத்தான, அ., என, குழந்தைகள் கையை பிடித்து எழுத பழக்கினர். தொடர்ந்து,  குழந்தைகளின் நாவில் ஓம் என எழுதி தேனை தடவினர்.  கல்வி பழகிய குழந்தைகளுக்கு கோவில்  குரு ஸ்வாமி, பென்சில், கரும்பலகை வழங்கி வாழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக மின்வாரிய பொறியாளா்கள் உருவாக்கிய ‘பெல்லோ’ கருவிக்கு மத்திய அரசு காப்புரிமை

தண்ணீா் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்

மாடு முட்டியதால் சிறுமி காயம்

தோ்தல் ஆதாயத்துக்காக எங்கள் நாட்டை பயன்படுத்த வேண்டாம்: பாகிஸ்தான் வலியுறுத்தல்

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT