தற்போதைய செய்திகள்

ஈரோடு அரசு மகளிர் பள்ளியில் எல்.கே.ஜி.யில் மழலைகள் சேர்ப்பு

26th Oct 2020 06:15 PM

ADVERTISEMENT

ஈரோடு: விஜயதசமி தினமான நேற்று ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாணவர் சேர்க்கை துவங்கியது.

கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இந்நிலையில் விஜயதசமியான நேற்று பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நிகழ்ச்சி துவங்கியது.

மாணவர் சேர்க்கைக்கு பள்ளி கல்வி துறை அனுமதி அளித்திருந்தது. நேற்று ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் மழலைகள் சேர்த்து கொள்ளப்பட்டனர்.

விஜயதசமி என்பதால் பெற்றோர்கள் பலரும் மழலைகளை பள்ளியில் சேர்த்தனர். பள்ளியில் சேர்ந்த மழலைகளுக்கு பரிசு பொருட்கள், இனிப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் ஆசிரியைகள், மழலைகள் சேர்ப்பு பணியில் ஈடுபட்டனர்.

தலைமை ஆசிரியை சுகந்தி கூறும் போது, விஜயதசமி என்பதால் மழலைகளை சென்டிமெண்ட்டாக சேர்த்துள்ளோம். அரசு பள்ளிகளை திறக்க அனுமதிக்கும் நாளில் இருந்து மட்டுமே மழலைகள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவர் என்றார்.
இதே போல் பல அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் மழலைகள் சேர்த்து கொள்ளப்பட்டனர்.

Tags : Erode
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT