தற்போதைய செய்திகள்

அக்.24இல் ஆளுநர் மாளிகை முன்பு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

DIN

மருத்துவக் கல்வியில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக்கோரி அக்டோபர் 24இல் ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக வெளியிட்ட அறிக்கையில்,

மருத்துவக் கல்வியில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவிகித முன்னிரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை, சட்டமன்றத்தில் முன்னிரிமை அடிப்படையில், அனைத்து கட்சிகளும் இணைந்து ஒருமனதாக செப்டம்பர் மாதம் 15 அன்று நிறைவேற்றி, மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களுக்கு அனுப்பியும், அவர் அந்த மாசோதாவிற்கு இதுவரை ஒப்புதல் அளிக்க முன்வரவில்லை.

நீட் முன்னிரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு மசோதா குறித்து அனைத்துக் கோணங்களிலும் கலந்தாலோசணை நடத்தி வருகிறேன். இது குறித்து முடிவு எடுக்க எனக்கு 3 அல்லது 4 வாரங்கள் தேவைப்படுகிறது.” என்று தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே ஒருமாத காலம் அவகாசம் முடிந்துவிட்ட நிலையில் குறைந்தபட்சம் மேலும் ஒரு மாதம் என்பது 7.5 சதவிகித முன்னிரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நீர்த்துப்போக வைப்பதாகும்.

நீட் தேர்வில் வெற்றி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித முன்னிரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு இனியும் கால அவகாசம் கோராமல், உடனே தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கோரியும் ஆளுநருக்கு அரசியல்ரீதியாக அழுத்தம் கொடுக்கத் தவறி, மாணவர்களுக்குத் துரோகம் செய்யும் எடப்பாடி அதிமுக அரசைக் கண்டித்தும் 24.10.2020 (சனிக்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் திரவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஆளுநர் மாளிகை முன்பு “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.” என அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT