தற்போதைய செய்திகள்

வீட்டிலிருந்து வேலை: மன அழுத்தத்தால் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

வீட்டிலிருந்து வேலை செய்வதால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர் ஜிகர் காந்தி (வயது 32). இவர் கடந்த 3 ஆண்டுகளாக நொய்டாவில் உள்ள நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டிலிருந்து வேலை செய்து வருகின்றார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பிரேத பரிசோதனையிலும் உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து காந்தியின் குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டபோது, கடந்த சில நாள்களாக வேலை குறித்து மன அழுத்தத்தில் இருந்ததாக கூறினர்.

கரோனா பொது முடக்கத்தால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 70 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT