தற்போதைய செய்திகள்

தெலங்கானா வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

19th Oct 2020 04:59 PM

ADVERTISEMENT

தெலங்கானா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு முற்றிலுமாக சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணமாக முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட கூறுகையில்,

கடந்த 100 ஆண்டுகளில் ஹைதராபாதில் இவ்வளவு கனமழை பெய்தது இல்லை. இந்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஏழை குடும்பங்களுக்கும் ரூ. 10 ஆயிரம், வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் மற்றும் லேசான சேதமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவித்தார்.

தெலங்கானா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், வீடுகள் இடிந்து விழுந்தும் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT