தற்போதைய செய்திகள்

ரோஹித் அதிரடி அரைசதம் : பஞ்சாபிற்கு 192 ரன்கள் இலக்கு

1st Oct 2020 09:23 PM

ADVERTISEMENT

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 191 ரன்கள் எடுத்தனர்.

ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் மும்பை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. துபையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற  முதலில்  பந்துவீச்சுத் தேர்வு செய்துள்ளார்.

மும்பை அணியில் தொடக்க வீரர்களாக டி காக் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் டி காக் அவுட்டானார்.

பின் களமிறங்கிய கிஷான் 28 ரன்னிலும், சூர்யகுமார் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தார்கள்.

ADVERTISEMENT

அரைசதம் கடந்து அதிரடியாக ஆடிய மும்பை கேப்டன் ரோஹித் சர்மா 45 பந்தில் 70 ரன்கள் எடுத்திருந்தபோது நிஷாம் பிடித்த அட்டகாசமான கேட்சில் அவுட்டானார்.

பின் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா மற்றும் போலார்ட் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆட நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தனர்.

இறுதிவரை களத்தில் இருந்த பாண்டியா 30 (11) ரன்களும், போலார்ட் 47 (20) ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதன்மூலம் பஞ்சாப் அணி வெற்றி பெற 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

Tags : IPL 2020
ADVERTISEMENT
ADVERTISEMENT