தற்போதைய செய்திகள்

சீனாவின் தியான்வென்-1 அனுப்பியது செல்ஃபி

UNI

செவ்வாய்க் கோளுக்கு ஜூலை 23 ஆம் தேதி சீன அனுப்பப்பட்ட விண்கலம் எடுத்து அனுப்பிய முதல் சுயப்புகைப்படத்தை வியாழக்கிழமை சீன விண்வெளித்துறை வெளியிட்டுள்ளது.

சீனாவின் முதல் செவ்வாய்க் கோளுக்கான விண்கலமான தியான்வென் - 1, இந்திய நேரப்படி கடந்த ஜூலை 23 அன்று காலை 4.41-க்கு வென்சாங் விண்வெளி நிலையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

தியான்வென் - 1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட 36 நிமிடம் 11 வினாடியில் வளிமண்டல சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த விண்கலமானது இதுவரை 18.8 லட்சம் கிலோமீட்டர் வெற்றிகரமாக பயணம் செய்துள்ளதாகவும், அந்த விண்கலம் எடுத்த முதல் சுயப்புகைபடத்தையும் வெளியிட்டது சீன விண்வெளித்துறை.

இந்த விண்கலம், 2021 முதல் செவ்வாய் கோளில் அய்வு செய்யப்படும் தகவல்களை பூமிக்கு அனுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT