தற்போதைய செய்திகள்

தாமிரவருணி ஆற்றின் கரைகளை கண்காணிக்க நீர்வள ஆணையம் அறிவுருத்தல்

30th Nov 2020 07:24 PM

ADVERTISEMENT

தாமிரவருணி ஆற்றின் கரைகளை கண்காணிக்க மத்திய நீர்வள ஆணையம்  திங்கள்கிழமை அறிவுருத்தியுள்ளது.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது இன்று காலை தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கே ஏறக்குறைய 975 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது. 

இது இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை காலை புயலாகவும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் வரும் 2-ம் தேதி மாலை இலங்கையை கடந்து குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும். 

இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ADVERTISEMENT

இதையடுத்து தாமிரவருணி ஆற்றின் கரைகள், மணிமுத்தாறு அணை மற்றும் பாபநாசம் அணை நீர்மட்டத்தை கண்காணிக்க மத்திய நீர்வள ஆணையம் அறிவுருத்தியுள்ளது.

Tags : Thamirabarani River
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT