தற்போதைய செய்திகள்

சென்னை முகாம்களில் 1,217 பேர்: மாநகராட்சி தகவல்

25th Nov 2020 08:13 PM

ADVERTISEMENT

நிவர் புயல் காரணமாக அடையாறு கரையோரம் மற்றும் இதரப் பகுதிகளில் இருந்து 1217 பேர் இதுவரை நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

நிவர் புயல் காரணமாக சென்னையின் அடையாறு மற்றும் அதன் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.

புதன்கிழமை நள்ளிரவு நிவர் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் இருந்து இதுவரை 1217 பேர் நிவாரண  முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

Tags : Adyar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT