தற்போதைய செய்திகள்

108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர்

24th Nov 2020 02:56 PM

ADVERTISEMENT

நிவர் புயல் எச்சரிக்கை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில்,

“நிவர் புயல் எச்சரிக்கை முன்னிட்டு மீட்புப் பணிகளுக்காக 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தமிழகம் முழுவதும் தயார் நிலையில் உள்ளது. மேலும் நாகப்பட்டினம், கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டும் 465 வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. 

தேவை ஏற்படின் அருகாமை மாவட்டங்களில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்படும்.” என தெரிவித்தார்

ADVERTISEMENT

108 ஆம்புலன்ஸ் அவசர தேவைக்கு 04428888105, 7338895011 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். 

Tags : nivar cyclone
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT