தற்போதைய செய்திகள்

ஆளுநர்-முதல்வர் சந்திப்பு ரத்து

23rd Nov 2020 05:16 PM

ADVERTISEMENT

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை ஆளுநர் மாளிகையில் முதல்வர் பழனிசாமி சந்திக்கவிருந்த நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கரோனா தடுப்புப் பணி மற்றும் தமிழகத்தில் உள்ள மற்ற பிரச்னைகள் குறித்து இன்று ஆளுநரை நேரில் சந்தித்து முதல்வர் ஆலோசனை செய்ய இருந்தார்.

இந்நிலையில், நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான பணியில் உள்ளதால் ஆளுநருடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tags : CM governor
ADVERTISEMENT
ADVERTISEMENT