தற்போதைய செய்திகள்

உ.பி.யில் திறக்கப்பட்ட கல்லூரிகள்

23rd Nov 2020 07:47 PM

ADVERTISEMENT

உத்தரபிரதேசம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் திங்கள்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கரோனா காரணமாக கடந்த மார்ச் முதல் நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், மத்திய அரசு அளித்த தளர்வையடுத்து பல மாநிலங்கள் படிப்படியாக கல்வி நிறுவனங்களை திறந்து வருகின்றனர்.

இருப்பினும், பள்ளிகள் திறக்கப்பட்ட மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கரோனா தொற்று பாதிக்கப்படுகிறார்கள்.

 

ADVERTISEMENT

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டுள்ளது. 

மாநில அரசின் நெறிமுறைகளின்படி, 50 சதவீத மாணவர்கள் வருகையுடன், ஒருநாள் விட்டு ஒருநாள் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், கல்வி நிறுவனங்களில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுவது, கூட்டம் சேராமல் பார்த்துக் கொள்வது, மாணவர்கள் ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளிவிட்டு அமர்வது போன்ற விதிமுறைகளை பின்பற்றி கல்வி நிறுவனங்கள் இயங்கின.

 

Tags : UP
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT