தற்போதைய செய்திகள்

எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரி கரோனா சிகிச்சை மையமாக மாற்றம்

23rd Mar 2020 10:01 AM

ADVERTISEMENT

 

கொச்சி:  கரோனா வைரஸ் இந்தியாவில் அதிகயளவில் பரவி வரும் நிலையில், கேரளம் மாநிலம் கலாமாசேரியில் உள்ள எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரி முழு அளவில் கரோனா வைரஸ் சிகிச்சை மையமாக மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர வெளி நோயாளி (ஓபி) பிரிவு மற்றும் டயாலிசிஸ் பிரிவு மட்டுமே செயல்படும்.

மருத்துவமனையில் வெளி நோயாளி பிரிவில் சிகிச்சை பெறும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அருகிலுள்ள அரசு சுகாதார மையத்திற்கு மாற்றப்படுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

ADVERTISEMENT

மாவட்டத்தில் தற்போது வரை 12 கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் 23 பேரும், வீடுகளில் 3961 பேரும் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT