தற்போதைய செய்திகள்

கரோனா வைரஸ்: மும்பையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

23rd Mar 2020 09:48 AM

ADVERTISEMENT


மும்பை (மகாராஷ்டிரா):  குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் என்ஆர்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து  50 நாட்களுக்கு மேலாக மோர்லாண்ட் சாலையில் நடைபெற்று வந்த உள்ளிருப்பு போராட்டம் கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை அடுத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை அடுத்து தேசிய மக்கள் தொகை பதிவு (என்பிஆர்) தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக மண்டல டிசிபி அபிநாஷ்குமார் கூறுகையில், "கரோனா வைரஸ் பரவுவதைக் கருத்தில் கொண்டு பெண்கள் போராட்டக்காரர்கள் போராட்டத்தை தற்காலிகமா நிறுத்த முடிவு எடுத்துள்ளதாக" கூறினார். 

தில்லியில், ஞாயிற்றுக்கிழமை "ஜனதா ஊரடங்கு உத்தரவை" நாடு கடைபிடித்ததால், சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது.

அந்த இடத்தில் போராட்டக்காரர்கள் இருந்தாலும், அவர்களில் பலர் முகமூடி அணிந்து ஈடுபட்டு வருகின்றனர். 

ADVERTISEMENT

கடந்த வியாழக்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், கரோனா வைரஸ் பாதிப்பின் தீவிரத்தை குறைக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியாக, மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டனர். 

இந்த நிலையில் நாடு முழுவதும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து தேசிய மக்கள் தொகை பதிவேடு நடைமுறை மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல்கட்ட பணிகளை தற்காலிகமாக ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT