தற்போதைய செய்திகள்

கோவையில் 70 சதவீதம் கடைகள் அடைப்பு

26th Jun 2020 12:16 PM

ADVERTISEMENT


கோவை: சாத்தான்குளம் வணிகர்களான தந்தை, மகன் விசாரணைக் காவலில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து நீதி கேட்டு கோவையில் 70 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. 

சாத்தான்குளம் வணிகர்களான தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணைக் காவலில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து நீதி கேட்டு தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை ஒரு நாள் கடையடைப்பு போராட்டமும், கடையடைப்பை தொடர்ந்து மாலை 5 மணிக்கு அஞ்சலி செலுத்தப்படும் என வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர்கள் வெள்ளையன் , விக்கிரமராஜா ஆகியோர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். 

கோவையில் வாகன நெரிசல் குறைந்து சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. 

ADVERTISEMENT

அதன்படி, கோவையின் முக்கிய கடைவீதிகளான ரங்கே கவுடர் வீதி, ஒப்பணக்கார வீதி, பெரியகடை வீதியில் பெரும்பாலான மளிகைக் கடைகள் திறக்கப்படவில்லை. இந்தக் கடையடைப்புக்கு ஆதரவாக மருந்துக் டைகள் காலை 7 முதல் 11 மணி வரையும், பேக்கரிகள், உணவு விடுதிகள் காலை 6 முதல் நண்பகல் 12 மணி வரையும் மூடப்பட்டன. கடையடைப்பு காரணமாக கோவையில் வாகன நெரிசல் குறைந்து சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. 

கோவை மாவட்டத்தில் 70 சதவீதம் மளிகைக் கடைகள் வெள்ளிக்கிழமை முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT