பெங்களூரு: பெங்களூருவில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் மேடையில் ஏறிய எனது மகள் அமுல்யா ‘பாகிஸ்தான் வாழ்க‘ என்று முழக்கமிட்டது தவறு என்றும் அவர் சில முஸ்லிம்களால் தவறாக வழிநடத்தப்படுகிறார் என அவரது தந்தை கருத்து தெரிவித்துள்ளார்.
பெங்களூரு சுதந்திரப் பூங்காவில் வியாழக்கிழமை குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவா் அசாதுதீன் ஓவைசி, மஜத மாமன்ற உறுப்பினா் இம்ராம் பாஷா உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
இந்த கூட்டத்தின் மேடையில் ஏறிய இளம்பெண் அமுல்யா(19), ‘பாகிஸ்தான் வாழ்க‘ என்று மூன்றுமுறை முழக்கமிட்டாா். இதனால் அதிா்ச்சி அடைந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள், உடனடியாக அமூல்யா மீது பாய்ந்ததோடு, அவா் பேசுவதை தடுத்து, ஒலிவாங்கியையும் பறித்தனா்.
இதனால் அதிா்ச்சி அடைந்த ஓவைசி, இம்ரான் பாஷா,‘இப்படிபேசுவதை அனுமதிக்க முடியாது’ என்று அமுல்யா மீது கோபப்பட்டனா். அதற்குள் மேடையில் ஏறிய போலீஸாா் அமுல்யாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, உப்பார்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துசென்றனா்.
விசாரணையை தொடர்ந்து அந்த பெண் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124 ஏ(தேசத் துரோக வழக்கு) மற்றும் 153 ஏ மற்றும் பி (வெவ்வேறு குழுக்களுக்கிடையே பகைமையை ஊக்குவித்தல், தூண்டதல், தேசிய ஒருங்கிணைப்புக்கு பாரபட்சமாக பேசுதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்த பின்னர் அவரை கைது செய்த போலீஸார், உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த ‘பாகிஸ்தான் வாழ்க‘ என்று முழக்கமிட்ட அமுல்யாவின் தந்தை தனது மகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் மேடையில் ஏறிய எனது மகள் அமுல்யா ‘பாகிஸ்தான் வாழ்க‘ என்று முழக்கமிட்டது தவறு என்றும் அவர் சில முஸ்லிம்களால் தவறாக வழிநடத்தப்படுகிறார். நான் சொல்வதைக் கேட்பதில்லை என கூறியுள்ளார்.
சிக்மகளூரு மாவட்டத்தின் கொப்பா பகுதியை சோ்ந்த அமுல்யா, பெங்களூரில் உள்ள ஆா்.வி.கல்லூரியில் பி.ஏ. பட்டம் படித்துள்ளாா். இவா், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மட்டுமல்லாமல், மரங்களை காக்கும் சுற்றுச்சூழல் போராட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளார்.
#WATCH "What Amulya said is wrong. She was joined by some Muslims&wasn't listening to me,"father of Amulya (who raised 'Pakistan zindabad'slogan at anti-CAA rally in Bengaluru today). He was confronted by unidentified men who were standing around him while he made the statement. pic.twitter.com/S0OQ2SpUXT