தற்போதைய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் 3-ஆம் கட்ட தேர்தல்: 50.53% வாக்குப்பதிவு

4th Dec 2020 07:04 PM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் 3-ஆம் கட்ட தேர்தலில் 50.53 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

யூனியன் பிரதேசத்தில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இதில், 50.53 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாநில தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, டி.டி.சி தேர்தலின் முதலாம் கட்ட தேர்தலில் 51.46 சதவீதமும், இரண்டாம் கட்டத்தில் 48.62 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

டிசம்பர் 19-ம் தேதி வரை மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 22 அன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

Tags : jammu kashmir election
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT