தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு விடுமுறை

3rd Dec 2020 07:10 PM

ADVERTISEMENT

புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை(வியாழக்கிழமை) தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலைகொண்டிருந்த புரெவி புயல், குமரிக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.

இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவுக்கு மேல் பாம்பன் - கன்னியாகுமரி இடையே தமிழக கடற்கரையை புரெவி புயல் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தென் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ADVERTISEMENT

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், அந்த மாவட்டங்களில் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : burevi cyclone
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT