தற்போதைய செய்திகள்

கம்பம் அருகே சூறாவளிக்காற்றால் வாழைமரங்கள் சேதம்

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன், குள்ளப்பகவுண்டன் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்த வாழை மரங்கள் சூறாவளிக்காற்றால் பலத்த சேதமடைந்தது.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் பலத்த மழையும், சூறாவளிக்காற்றும் வீசி வருகிறது.

இப்பகுதியில் உள்ள வாழை விவசாயின் கடும் சேதத்தை சந்தித்து வருகின்றனர். 

ஜி.9 எனும் பச்சை வாழை, ஏத்தப் பழம் என்னும் நேந்திரம் போன்ற ரகங்கள் சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்ப கவுண்டன்பட்டி, சுருளி அருவி செல்லும் பகுதிகளில் நூற்றுக்கும் மேலான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ளனர்.

தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் கடந்த வெள்ளி, சனிக்கிழைமை வீசிய சூறாவளி காற்றால் வாழை மரங்கள் சாய்ந்தன. 

ஒரு மரத்தில் ஒரு தார் சுமார் 30 கிலோ வரை எடை கொண்டதாகும். வீசிய சூறாவளி காற்றால்  மரங்கள் ஒடிந்தும், தரையில் சாய்ந்தும், வாழைத் தார்கள் மண்ணில் புதைந்தும், வாழை இலைகள் வீசிய காற்றால் கிழிந்தும் தொங்குகின்றன.

இது பற்றி சுருளிப்பட்டியைச் சேர்ந்த  விவசாயி முகுந்தன் என்பவர் கூறுகையில், மழையுடன் கலந்து பலத்த காற்று வீசி வருவதால் பல ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து அறுவடைக்கு தயாரான நிலையில் வாழை மரங்கள் பலத்த சேதமடைந்துள்ளது. சேத மதிப்பு பல லட்சம் ரூபாய் பெறுமானமுள்ளதாகும், மாவட்ட நிர்வாகம் கணக்கெடுத்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT