இந்தியா

மது போதையில் ஓடும் காரின் மீது உடற்பயிற்சி செய்த இளைஞர்!

31st May 2023 08:00 PM

ADVERTISEMENT

 

ஹரியாணா மாநிலத்தில் மதுபோதையில் இருந்த நபர் ஓடும் காரின் மீது உடற்பயிற்சி செய்யும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

மேலும், மதுபோதையில் காரின் இரு புறங்களிலும் கதவுகளைத் திறந்துவிட்டு நின்று கொண்டு ஆபத்தான முறையில் பயணித்த இளைஞர்களுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.

ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், மதுபோதையில் இருந்த இளைஞர்கள் காரில் பயணித்துள்ளனர். காரின் இருபுற கதவுகளைத் திறந்து நின்றவாறு பயணித்துள்ளனர். 

ADVERTISEMENT

அதில், ஒரு இளைஞர் காரின் மீது அமர்ந்தவாறு மது போதையில் தள்ளாடிக்கொண்டு அமர்ந்திருந்தார். பின்னர், காரின் மீது உடற்பயிற்சி செய்யவும் ஆரமித்துவிட்டார். நின்றுகொண்டு பயணித்த இளைஞர்கள் அதனை ஊக்குவிக்கும் வகையில் கூச்சலிட்டனர்.

இதனை சக பயணிகள் விடியோ எடுத்து பதிவிட்டுள்ளனர். இந்த விடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அந்த இளைஞர்களைப் பிடித்து போக்குவரத்து காவல் துறையினர் ரூ. 6,500 அபராதம் விதித்தனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT