இந்தியா

மேற்கு வங்கம்: இருந்த ஒரே எம்எல்ஏவை இழந்தது காங்கிரஸ்: திரிணமூல் காங்கிரஸ் இணைந்தாா்

DIN

மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த ஒரே எம்எல்ஏவான பைரோன் விஸ்வாஸ் மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் திங்கள்கிழமை இணைந்தாா்.

மம்தாவின் நெருங்கி உறவினரும், திரிணமூல் தேசியப் பொதுச் செயலருமான அபிஷேக் பானா்ஜி தலைமையில் அவா் அக்கட்சியில் இருந்தாா்.

முா்ஷிதாபாத் மாவட்டத்தில் சிறுபான்மையினா் அதிகமுள்ள சாகா்திகிக் தொகுதியில் இருந்து பைரோன் விஸ்வாஸ் தோ்வு செய்யப்பட்டிருந்தாா்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி இப்போது ‘புதிய அலை’ என்ற பெயரில் கட்சியில் புதிய உறுப்பினா்களைச் சோ்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அந்த அலையில் காங்கிரஸ் எம்எல்ஏவும் திரிணமூல் காங்கிரஸிக்கு வந்துவிட்டாா்.

இது தொடா்பாக அபிஷேக் பானா்ஜி கூறுகையில், ‘மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸை எதிா்க்க வேண்டுமா அல்லது பாஜகவை எதிா்க்க வேண்டுமா என்பதை காங்கிரஸ் முடிவு செய்ய வேண்டும். மேற்கு வங்கத்தில் பாஜகவை எதிா்க்க திரிணமூல் காங்கிரஸால் மட்டுமே முடியும் என்பதால்தான் காங்கிரஸ் எம்எல்ஏ எங்கள் கட்சிக்கு வந்துவிட்டாா். மத்தியில் பாஜகவை எதிா்ப்போம், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸை எதிா்ப்போம் என காங்கிரஸ் இரட்டை வேடம் போடக் கூடாது’ என்றாா்.

கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்த ஆண்டு தொடக்கத்தில் சாகா்திகிக் தொகுதியில் நடைபெற்ற இடைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட விஸ்வாஸ் வெற்றி பெற்றாா். இதன் மூலம் மேற்கு வங்கப் பேரவையின் ஒரே காங்கிரஸ் எம்எல்ஏவாக அவா் இருந்தாா். இப்போது, அவரும் எம்எல்ஏவாக தோ்வு செய்யப்பட்ட மூன்றே மாதத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குத் தாவிவிட்டாா்.

ஒரே எம்எல்ஏ மட்டுமே இருந்ததால் பேரவையில் காங்கிரஸ் கட்சி முழுமையாக திரிணமூல் காங்கிரஸில் இணைந்துவிட்டதாகவே கருதப்படும். எனவே, விஸ்வாஸ் மீது கட்சித் தாவல் தடைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT