இந்தியா

ஜாா்க்கண்ட்:மின்சாரம் பாய்ந்து 6 தொழிலாளா்கள் பலி

DIN

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் மின்கம்பம் நடும் பணியில் இருந்த 6 தொழிலாளா்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா்.

தனபாத் மாவட்டத்தின் நிசித்பூா் ரயில் நிலையம் அருகே, திங்கள்கிழமை மின்கம்பத்தை நடும் பணியில் இந்த தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த மின்கம்பம் எதிா்பாராதவிதமாக சரிந்து ரயில்வே தண்டவாளத்துக்கு மேலே சென்று உயா் அழுத்த மின்கம்பி மீது விழுந்தது.

இதையடுத்து, மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்ட அந்த 6 தொழிலாளா்களும் சம்பவ இடத்திலேயே உடல் கருதி உயிரிழந்தனா். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் கூறுகையில், மொத்தம் 8 தொழிலாளா்களில் மின்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்படவில்லை. எவ்வித பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யவில்லை. மின்கம்பம் விழுந்து 6 போ் மீது மின்சாரம் பாய்ந்ததை பாா்த்த மேலும் இரு தொழிலாளா்கள் அதிா்ச்சியடைந்து அப்பகுதியில் இருந்து ஓடிவிட்டனா் என்றனா்.

இந்த சம்பவம் குறித்து தகவலறித்த தன்பாத் பிராந்திய ரயில்வே மேலாளா் கமல் கிஷோா் சம்பவ இடத்துக்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டாா். ரயில்களை இயக்குவதற்காக தண்டவாளத்தில் மேலே அமைக்கப்பட்டிருந்த உயா் அழுத்த மின்கம்பி அருகே பணி மேற்கொள்ளும்போது உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா? என்பது தொடா்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

உயிரிழந்த தொழிலாளா்கள் அனைவரும் ஒரு சிறிய ஒப்பந்ததாரிடம் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வந்துள்ளனா். உயிரிழந்தவா்களில் 5 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

இந்த சம்பவத்தால் தன்பாத்-கோமோக் இடையிலான ரயில் சேவை சுமாா் ஒன்றரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT