இந்தியா

பெங்களூருவுக்கு மஞ்சள் எச்சரிக்கை: புதிய அரசுக்கு வந்த முதல் சோதனை

30th May 2023 12:44 PM

ADVERTISEMENT

பெங்களூரு: பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று முதல் ஐந்து நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் லேசான மழை பெய்தாலே, பெரும் வெள்ளக்காடாகிவிடும் என்பதால், ஐந்து நாள்களுக்கு அதுவும் மஞ்சள் எச்சரிக்கையோடு கனமழை பெய்தால் என்னவாகும் என்பது அங்கு வசிக்கும் மக்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

கர்நாடகத்தில் பொறுப்பேற்றிருக்கும் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு, முதல் சோதனையாக இந்த மஞ்சள் எச்சரிக்கை வந்திருக்கிறது.

அதாவது, பெங்களூருவின் பெரும்பாலான பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மழையுடன் காற்றும் வீசக்கூடும். இதனால், கர்நாடகத்தின் தெற்கு உள்பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை மாலை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனிடையே, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், மாநகர அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடத்தி மழைக்காலத்தில், பெங்களூரு நகரத்துக்குள் வெள்ளம் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். பெங்களூரு நகரத்தின் பெயர் எக்காரணம் கொண்டும் வெள்ளம் என்ற செய்திக்காக உலகளவில் தெரியவரக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். வெள்ளம் வந்த பிறகு அதிகாரிகளை தண்டிப்பது அவசியமற்றது. வெள்ளம் வராமல் தடுப்பதே அவசியம். சிறப்பான பணியை மேற்கொள்ளுங்கள். அரசுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுங்கள் என்று அதிகாரிகளிடம் சிவகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT