இந்தியா

மனீஷ் சிசோடியாவிற்கு ஜாமீன் மறுப்பு!

30th May 2023 12:44 PM

ADVERTISEMENT

தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் தொடர்புடைய வழக்கில் மனீஷ் சிசோடியாவிற்கு ஜாமீன் வழங்க தில்லி உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரித்து வரும் கலால் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.

மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், மனீஷ் சிசோடியாவிற்கு ஜாமீன் வழங்கினால், சிசோடியா சாட்சியங்களைக் கலைக்கக் கூடும் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மனீஷ் சிசோடியா நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: அமைச்சரின் ஒரு டிவீட்.. களேபரமான டிவிட்டர் பக்கம்

தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் தொடர்புடைய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை வரும் ஜூன் 1-ஆம் தேதி வரை நீட்டித்து ரெளஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT