இந்தியா

தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுப்பு

DIN

தில்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்த காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தில்லி காவல்துறை தெரிவித்திருப்பதாவது, தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது. மல்யுத்த வீரர்கள் வருங்காலத்தில் மீண்டும் போராட்டம் நடத்த அனுமதி கோரினால், ஜந்தர் மந்தர் அல்லாத பொருத்தமான இடத்தில் அனுமதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.  பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக 18 வயதுக்குக் குறைவான வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றஞ்சாட்டினா். இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக பிரிஜ் பூஷணுக்கு எதிராக தில்லி காவல் துறை இரண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. 

அதில் ஒரு வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரிஜ் பூஷணை கைது செய்ய வலியுறுத்தி, தில்லி ஜந்தா் மந்தா் பகுதியில் வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட முன்னணி மல்யுத்த வீரா், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். புதிய நாடாளுமன்றக் கட்டடம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்ட நிலையில், அதன் முன்பாக மகளிா் மகாபஞ்சாயத்து கூட்டத்தை நடத்துவதற்கு போராட்டத்தில் ஈடுபட்ட வீரா், வீராங்கனைகள் திட்டமிட்டிருந்தனா். இதை அறிந்த காவல் துறை, புதிய நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல வேண்டாம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. 

எனினும் எச்சிரிக்கையை மீறி, அவா்கள் நாடாளுமன்றம் நோக்கிச் செல்லத் தொடங்கினா். அப்போது காவல் துறைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. வினேஷ் போகாட், அவரின் சகோதரி சங்கீதா போகாட், சாக்ஷி மாலிக் ஆகியோா் தடுப்புகளை கடந்து செல்ல முயன்ாகக் கூறப்படுகிறது. அவா்களை காவல் துறையினா் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று காவல் துறை வாகனங்களில் ஏற்றினா். இதேபோல போராட்டத்தில் ஈடுபட்ட இதர வீரா், வீராங்கனைகள் மற்றும் அவா்களின் ஆதரவாளா்களும் காவல் துறை வாகனங்களில் ஏற்றப்பட்டனா். 

அவா்கள் அனைவரும் தில்லியின் வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். மயூா் விஹாா் பகுதி அருகே உள்ள காவல் நிலையத்துக்கு பஜ்ரங் புனியா அழைத்துச் செல்லப்பட்டாா். புராரி பகுதிக்கு சாக்ஷி மாலிக் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், வினேஷ் போகாட் மற்றும் சங்கீதா போகாட் கால்காஜி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் 42 டிகிரி வரை அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

SCROLL FOR NEXT