இந்தியா

மேதாந்தா நிகர லாபம் 5 மடங்காக உயர்வு

DIN

புதுதில்லி:  ஹெல்த்கேர் வழங்குநரான குளோபல் ஹெல்த் (மேதாந்தா) மார்ச் 31, 2023 உடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் அதன் நிகர லாபம் ஐந்து மடங்கு அதிகரித்து ரூ.101 கோடியாக உயர்ந்தது.

2021-22ம் நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் நிறுவனம் ரூ.17.5 கோடி நிகர லாபத்தை ஈட்டியது. இந்த காலாண்டில் வருவாய் 37 சதவீதம் அதிகரித்து ரூ.732 கோடியாக இருந்தது. மார்ச் 31, 2023 உடன் முடிவடைந்த நிதியாண்டில், மேதாந்தா நிறுவனம் ரூ.326 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்தது. அதே வேளையில் 2021-22ம் நிதியாண்டில் வருவாய் ரூ.2,206 கோடியிலிருந்து ரூ.2,759 கோடியாக அதிகரித்துள்ளது.

மார்ச் 31, 2023 உடன் முடிவடைந்த ஆண்டு மற்றும் காலாண்டில் அனைத்து வருவாய் மற்றும் இலாப அளவீடுகளிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் வலுவான நிதி செயல்திறனை நாங்கள் பதிவு செய்துள்ளோம் என்றார் குளோபல் ஹெல்த் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இயக்குநருமான பங்கஜ் சாஹ்னி.

மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் 1.05 சதவீதம் உயர்ந்து ரூ.594.10 முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT