இந்தியா

புதிய நாடாளுமன்றம்: செங்கோல் முன்பு உரையாற்றும் மோடி!

28th May 2023 01:02 PM

ADVERTISEMENT


புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா தேசிய கீதத்துடன் தொடங்கியது. நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி உள்பட அமைச்சர்கள் பலர் நாடாளுமன்றத்துக்கு வருகை புரிந்தனர்.

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவையொட்டி முதல்கட்டமாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க தருணம் என பிரதமர் மோடி குறிப்பிட்டார். 
 
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, புதிய பாதை புதிய பயணம் தொடங்கியுள்ளது.  புதிய பாதைகளில் பயணம் செய்தே புதிய குறிக்கோள்களை இலக்குகளை அடைய இயலும்.

ADVERTISEMENT

900 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் ஜனநாயக பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டது. சோழர்கள் ஆட்சியில் நீதி மற்றும் நல்லாட்சியின் அடையாளமாக செங்கோல் விளங்கியது.

செங்கோல் புனிதமானது, முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாட்டின் செங்கோல் நம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கம் அளிக்கும். ராஜாஜி மற்றும் ஆதீனத்தின் பங்களிப்பில் செங்கோல் உருவாக்கப்பட்டது.

நன்மதிப்போடு உலக நாடுகள் இந்தியாவை பார்க்கின்றன. உலகமே இந்தியாவை உற்றுநோக்குகிறது, இந்தியா முன்னேறினால் உலகமே முன்னேறும்.

ஆங்கிலேயர் காலத்தில் அதிகாரப்பகிர்வளிக்கும் செங்கோலுக்கு முக்கியத்துவம் அளித்தோம். செங்கோல் தற்போதுதான் சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT