இந்தியா

ஏழை, எளிய மக்களின் குரலாக செங்கோல் ஒலிக்கும்: மோடி

28th May 2023 01:28 PM

ADVERTISEMENT

 

புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோல் ஏழைம், எளிய மக்களின் குரலாக ஒலிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

புதிய நாடாளுமன்ற கட்டடடத்தை திறந்துவைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  புதிய நாடாளுமன்ற வளாகம் இந்தியர்கள் அனைவருக்குமானது, அனைத்து இந்தியர்களுக்கும் பெருமிதம் அளிக்கக்கூடியது.

புனிதமான செங்கோலின் பெருமையை மீட்டெடுக்க முடிந்தது நமது அதிருஷ்டம். இதற்காக பல தடைகளைத் தாண்டி வந்துள்ளோம்.  

ADVERTISEMENT

தமிழ்நாட்டு ஆதீனங்களில் ஆசியுடன் நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களின் குரலாக செங்கோல் ஒலிக்கும். 

செங்கோல் புனிதமானது, முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாட்டின் செங்கோல் நம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கம் அளிக்கும். ராஜாஜி மற்றும் ஆதீனத்தின் பங்களிப்பில் செங்கோல் உருவாக்கப்பட்டது.

புதிய நாடாளுமன்றம் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டுள்ளது. இந்த பொற்காலத்தில் நுழைவதற்குள் பல தடைகளைத் தாண்டி வந்துள்ளோம் எனக் குறிப்பிட்டார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT