இந்தியா

புதிய நாடாளுமன்ற கட்டடம் அருகே தடுத்து நிறுத்தப்பட்ட போராட்டக்காரர்கள்!

28th May 2023 12:04 PM

ADVERTISEMENT


புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நடைபெற்று வருவதையொட்டி, தில்லி அம்பாலா பகுதியில், மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா சா்வ மத பிராா்த்தனைகளுடன் ஞாயிற்றுக்கிழமை இன்று (மே 28) காலை தொடங்கியது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அதிகாரபூா்வமான நிகழ்ச்சி காலை 12 மணிக்கு நடைபெறுகிறது.

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவையொட்டி தில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் அதிக எண்ணிக்கையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

நாடாளுமன்ற திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதால், இந்நிகழ்ச்சியை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

ADVERTISEMENT

இந்நிலையில், மல்யுத்த போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பஞ்சாபை சேர்ந்த கிஷான் மஸ்தூர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் அம்பாலா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

அவர்கள் தில்லி ஜந்தர்மந்தரில் நடைபெற்றுவரும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தில் பங்கேற்பதற்காக அமிர்தசரஸிலிருந்து நேற்று வருகை புரிந்தனர். அம்பாலா பகுதியில் வந்த அவர்களை தில்லி காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல் துறையினருடன் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் சற்று நேரம் சலசலப்பு நிலவியது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக் உள்ளிட்டோா் அளித்துள்ள பாலியல் துன்புறுத்தல் புகாா் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த ஏப்ரல்-23 ஆம் தேதி முதல் ஜந்தா் மந்தரில் மல்யுத்த வீரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT