இந்தியா

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது: சுகாதாரத் துறை அமைச்சகம்

28th May 2023 12:35 PM

ADVERTISEMENT

இந்தியாவில் புதிதாக 403 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4,972 ஆக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: புதிய நாடாளுமன்ற கட்டடம் அருகே தடுத்து நிறுத்தப்பட்ட போராட்டக்காரர்கள்!

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில் கூறியதாவது: நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,864 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 3 பேர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4.49 கோடியாக உள்ளது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் சதவிகிதம் 0.01 ஆக உள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் சதவிகிதம் 98.80 ஆக உள்ளது. இதுவரை 220.66 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT