இந்தியா

நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் தேவ கவுடா பங்கேற்கிறார்

26th May 2023 09:02 AM

ADVERTISEMENT

தில்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் கலந்துகொள்வதாக முன்னாள் பிரதமர் தேவ கவுடா அறிவித்துள்ளார். 

தில்லியில் புதிய நாடளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி வருகிற மே 28 ஆம் தேதி திறந்துவைக்கிறார். 

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் மோடி திறந்துவைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த விழாவைப் புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 19 எதிா்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. இதனால் நாடளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவரே திறந்துவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. 

இந்நிலையில் முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவருமான தேவ கவுடா, புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் கலந்துகொள்ளவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமானவரித் துறை சோதனை

ADVERTISEMENT
ADVERTISEMENT