இந்தியா

புதிய நாடாளுமன்றம் திறப்பு: 75 ரூபாய் நாணயம் வெளியிட முடிவு!

26th May 2023 10:55 AM

ADVERTISEMENT

புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கவுள்ளதைக் கொண்டாடும் விதமாக 75 ரூபாய் நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தில்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி வருகிற மே 28 ஆம் தேதி திறந்துவைக்கிறார். திறப்பு விழாவையொட்டி அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

இதனிடையே, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் மோடி திறந்துவைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் குடியரசுத் தலைவர் திறந்துவைக்க வலியுறுத்தியும் திறப்பு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 19 எதிா்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. 

இதையும் படிக்க | 

ADVERTISEMENT

ஆனால் எதிர்க்கட்சிகள் தங்கள் முடிவுகள் பரிசீலனை செய்ய வேண்டும் மத்திய அமைச்சர்கள் கூறி வருகின்றனர். 

இந்நிலையில் புதிய நாடளுமன்றக் கட்டடம் திறக்கவுள்ளதைக் கொண்டாடும் விதமாக 75 ரூபாய் நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாடாளுமன்றம் திறக்கவுள்ள மே 28 ஆம் தேதி நாணயம் வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT