இந்தியா

ஒரே தரவரிசையில் 2 பெண்கள் தேர்ச்சி: யுபிஎஸ்சி தேர்வில் நடந்தது என்ன?

26th May 2023 02:57 PM

ADVERTISEMENT

அண்மையில் வெளியான யுபிஎஸ்சி இறுதித் தேர்வு முடிவில், ஒரே பெயர்களைக் கொண்ட இரு பெண்கள் ஒரே தரவரிசையைப் பிடித்திருப்பதாக சொந்தம் கொண்டாடும் தகவல் தெரிய வந்துள்ளது.

ஒரே பெயர் கொண்ட இரண்டு பெண்களின் பதிவு எண்ணும் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், இரண்டு பெண்களுமே 184வது இடத்தில் தேர்ச்சி பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக தனித்தனியே காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களின் முதல் பெயரும் ஆயிஷா என்பதும், அவர்கள் இருவருக்கும் ஒரே பதிவெண் வழங்கப்பட்டிருப்பதாகவும், இருவருமே 184வது இடத்தில் தேர்ச்சி பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து தற்போது ஊடகங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து இருவரும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். யுபிஎஸ்சி நடத்திய தேர்வில் குளறுபடி நடந்துள்ளதா அல்லது இரண்டு பெண்களின் நுழைவுச் சீட்டில் ஒன்று போலியானதா? என்பது விசாரணையில் தெரியவரும் என்று கருதப்படுகிறது.

ADVERTISEMENT

இதுபோல, துஷார் குமார் என்ற பெயரில் பிகார் மற்றும் ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த இரண்டு பேர் தெர்வெழுதிய நிலையில், இருவரும் தாங்கள் 44வது தரவரிசையில் வெற்றி பெற்றதாக சொந்தம் கொண்டாடி வருகிறார்கள்.

இவருக்குமே அழைப்பாணை விடுக்கப்பட்டிருப்பதும், மே 8ஆம் தேதி நடந்த நேர்முகத் தேர்வை இரண்டு பேருமே எதிர்கொண்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதில், பிகாரைச் சேர்ந்தவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். எனவே, ஹரியாணாவைச் சேர்ந்த நபர் போலியான நுழைவுச் சீட்டை வைத்திருப்பதாகக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் நடத்தப்பட்ட குடிமைப் பணிகளுக்கான இறுதித் தோ்வு முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. 

யுபிஎஸ்சி நடத்தும் ஐஏஎஸ் (இந்திய ஆட்சிப் பணி), ஐபிஎஸ் (இந்திய காவல் பணி), ஐஎஃப்எஸ் (இந்திய வெளியுறவு பணி) மற்றும் குரூப்-ஏ, குரூப்-பி பணியிடங்களுக்கான குடிமைப் பணிகள் தோ்வு முதல்நிலை (பிரிலிமினரி), முதன்மை (மெயின்) மற்றும் ஆளுமைத் தோ்வு என மூன்று கட்டங்களாக நடத்தப்படும்.

இதில் முதல்நிலைத் தோ்வு கடந்த ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி நடத்தப்பட்டு, அதே மாதத்தில் தோ்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. முதன்மைத் தோ்வு கடந்த ஆண்டு செப்டம்பா் 16 முதல் 25-ஆம் தேதி வரை நடத்தப்பட்டு, டிசம்பா் 6-ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டது.

இறுதித் தோ்வான ஆளுமைத் தோ்வு கடந்த 18-ஆம் தேதி நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT