இந்தியா

ஜேபி பார்மா லாபம் 3.5% உயர்வு

24th May 2023 07:38 PM

ADVERTISEMENT

 

புதுதில்லி: ஜே.பி. பார்மா நிறுவனம், மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் வரிக்கு பிந்தைய லாபம் 3.5 சதவீதம் அதிகரித்து ரூ.88 கோடி அதிகரித்துள்ளது.

2021-22 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.85 கோடியாக இருந்தது. 

2023ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.762 கோடியாக இருந்தது. இது 2022 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.625 கோடியாக இருந்தது.

ADVERTISEMENT

கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம் ரூ.3,149 கோடி வருவாய் ஈட்டியுள்ள நிலையில் இதே காலகட்டத்தில் வரிக்கு பிந்தைய லாபம் 386 கோடி ரூபாயில் இருந்து 410 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 6 சதவீத வளர்ச்சி என ஜே.பி.பார்மா தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் 1.59 சதவீதம் சரிந்து ரூ.1,919.40 ரூபாயாக முடிவடைந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT