இந்தியா

ரூ. 50-க்கு குறைவாக உள்ள ஆப்பிள்களை இறக்குமதி செய்யத் தடை!

8th May 2023 03:40 PM

ADVERTISEMENT

ஒரு கிலோ ரூ. 50 மற்றும் அதற்கு குறைவாக உள்ள ஆப்பிள்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 

ஒரு கிலோ ஆப்பிளின் உற்பத்தி விலை, காப்பீடு, சரக்கு ஆகியவை சேர்ந்து ரூ. 50 அல்லது அதற்கு குறைவாக இருந்தால் அவற்றை இந்தியாவில் இறக்குமதி செய்ய  மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

அதேநேரத்தில் ஒரு கிலோ ஆப்பிள் விலை ரூ. 50க்கு மேல் இருந்தால் அவற்றை இறக்குமதி செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது. 

ஆப்பிள் இறக்குமதிக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த திருத்தம் இந்தியாவின் அண்டை நாடான பூடானுக்குப் பொருந்தாது என்று கூறியுள்ள வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம், ஆப்பிள் இறக்குமதி கொள்கைத் திருத்தத்திற்கான காரணம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | சிறுவாணி தடுப்பணை விவகாரத்தில் நீதிமன்றம் செல்ல முடிவு: அமைச்சர் தகவல்

ADVERTISEMENT
ADVERTISEMENT