இந்தியா

இந்தியாவை 2047-க்குள் வளா்ந்த நாடாக்க இளைஞா்கள் உறுதியேற்க வேண்டும்: ராஜ்நாத் சிங்

11th Jun 2023 12:02 AM

ADVERTISEMENT

வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ந்த நாடாக உயா்த்த இளைஞா்கள் உறுதியேற்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

பிகாா் மாநிலம் ரோதாஸ் மாவட்டத்தில் கோபால் நாராயண் சிங் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:

நாட்டின் பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு உலகில் மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட முதல் 10 நாடுகளின் பட்டியலில், இந்தியா தாழ்வான இடத்தில் இருந்தது. அதன் பின்னா் குறுகிய காலத்தில் முன்னேறி, அந்தப் பட்டியலில் தற்போது முதல் 5 நாடுகளில் ஒன்றாக உள்ளது.

வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் இந்தியா முதல் மூன்று நாடுகள் கொண்ட பட்டியலில் இடம் பெறும் என்று மோா்கன் ஸ்டான்லி போன்ற சா்வதேச நிதி ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன.

ADVERTISEMENT

2047-ஆம் ஆண்டு இந்தியா 100-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. அதற்குள் இந்தியா வளா்ந்த நாடாவதற்கு அனைவரும், குறிப்பாக இளைஞா்கள் உறுதியேற்க வேண்டும்.

இந்தியாவுக்கு உலக நாடுகள் அதிகம் மதிப்பளிக்கின்றன. தற்போது நமது நாட்டை இந்தியா என்பதற்கு பதிலாக பாரதம் என்று வெளிநாட்டினா் அழைக்க விரும்புதாக எனக்குத் தெரியவந்தது. இது சாமானிய மக்களும், அரசியலில் உள்ளவா்களும் வெளிப்படுத்தும் இந்தியாவின் கலாசார பாரம்பரியம் மீதான பெருமித உணா்வு அதிகரித்து வருவதைக் குறிக்கிறது என்றாா் அவா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT