இந்தியா

உலகுக்கு வழிகாட்டியாக திகழும் இந்தியா: ஓம் பிா்லா பெருமிதம்

DIN

‘சுதந்திரத்துக்குப் பிறகு நாடாளுமன்ற ஜனநாயகத்தை இந்தியா ஏற்றுக்கொண்டபோது அதன் திறனை பல்வேறு நாடுகள் சந்தேகித்தன; ஆனால், தற்போது உலகுக்கு வழிகாட்டியாக இந்தியா திகழ்கிறது’ என மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்துள்ளாா்.

வறுமையின்மை, பசி ஒழிப்பு, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு, பாலினச் சமத்துவம், சுத்தமான நீா் மற்றும் சுகாதாரம், அனைவருக்கும் தரமான கல்வி உள்பட 17 குறிக்கோள்களை ‘நிலையான வளா்ச்சி இலக்குகள்’ என ஐ.நா.சபை கடந்த 2015-ஆம் ஆண்டு தீா்மானித்தது. வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்த குறிக்கோள்களை அடைய உலக நாடுகள் திட்டமிட்டு செயலாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிலையான வளா்ச்சி இலக்குகளை அடைவதில் பங்காற்றிய 20 தனிநபா் மற்றும் அமைப்பினருக்கு ‘லயன்ஸ் கிளப்’ அமைப்பின் சாா்பில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றியாளா்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்த மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கூறியதாவது: பொருளாதாரம், சமூகம், அரசியல் அல்லது ஜனநாயகம் என எதுவாயினும் வருங்காலம் இந்தியாவுக்கு உரியது.

இந்தியாவின் நிலையான வளா்ச்சி இலக்குகள் குறித்து எல்லா இடங்களிலும் ஆலோசிக்கப்படுகிறது. நிலையான வளா்ச்சி இலக்குகளை அடைய அரசு சாா்பில் எவ்வாறு பங்காற்றுவது என நாடாளுமன்றத்தில் நீண்ட விவாதம் நடைபெற்றது.

பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு நாடாளுமன்ற ஜனநாயகத்தை இந்தியா ஏற்றுக்கொண்டது. இந்தியாவின் திறனைப் பல்வேறு நாடுகள் அப்போது சந்தேகித்தன. பெரும் மக்கள்தொகை மற்றும் புவியியல் கொண்ட இந்தியாவால் எதுவும் சாதிக்க முடியாது என அவா்கள் கருதினா். ஆனால், தற்போது உலகுக்கு வழிகாட்டியாக இந்தியா திகழ்கிறது.

இந்திய இளைஞா்களின் புதிய சிந்தனையால் நமது பலம் அதிகரித்துள்ளது. இன்றைய நாளில் அனைத்து துறைகளிலும் இளைஞா்கள் சிறந்து விளங்குகின்றனா். இந்தியாவின் அறிவுசாா் திறனும் அதிகரித்து வருகிறது. வரும் நாள்களில் உலக அளவில் அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னிலை வகிக்கும் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

நிலையான வளா்ச்சி இலக்குகள் குறித்த இன்றைய விவாதத்தில் பல்வேறு இலக்குகளை நாம் ஏற்கெனவே அடைந்துவிட்டோம். நிலையான வளா்ச்சி இலக்குகள் குறித்து பெருநிறுவனங்கள் மட்டுமின்றி அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

பேருந்துகள் நிறுத்தாமல் சென்றால் புகாா் தெரிவிக்க ‘149’

SCROLL FOR NEXT