இந்தியா

வாக்கு வங்கி அரசியலை வளர்ச்சியை மையப்படுத்தியதாக மாற்றியது பிரதமர் மோடி அரசு: ஜெ.பி.நட்டா!

DIN

இந்தியாவை வாக்கு வங்கி அரசியலில் இருந்து வளர்ச்சியை மையப்படுத்தியதாக பிரதமர் நரேந்திர மோடி மாற்றியுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீ காளஹஸ்தியில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஏழை மக்களின் நலனிலும், நல்ல நிர்வாகத்தையும் பின்பற்றி வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் அரசியல் எவ்வாறு பார்க்கப்பட்டது என்பதனை பிரதமர் மாற்றியுள்ளார் என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒரு காலத்தில் இந்திய அரசியல் வாக்கு வங்கி அரசியலாக இருந்தது. தற்போது வாக்கு வங்கி அரசியலிருந்து வளர்ச்சியை மையப்படுத்திய அரசியலாக மாற்றப்பட்டுள்ளது. வாக்கு வங்கி அரசியலில் இருந்து விலகி மத்திய அரசு வளர்ச்சியை மையப்படுத்திய பொறுப்பான ஆட்சியை வழங்கி வருகிறது.

உலகின் 5-வது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாகவும் இந்தியா உள்ளது. பிரதமர் கிராமங்கள், ஏழை மக்கள், விளிம்புநிலை மக்கள், தலித், பெண்கள் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்காக உழைத்து வருகிறார். 1.98 லட்சம் கிராமங்கள் கேபிள் மூலம் இணைய வசதியைப் பெற்றுள்ளன. 2014 ஆம் ஆண்டு 19 ஆயிரம் கிராமங்கள் மின்சார வசதி இல்லாமல் இருந்தது. தற்போது அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT