கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று பிற்பகல் மத்தியப் பிரதேசத்திற்கு வருகை தருகிறார்.
கடந்த மாதம் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதையடுத்து, கர்நாடக முதல்வராக சித்தரமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பதவியேற்ற பின்னர் முதல்முறையாக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மத்தியப் பிரதேசத்திற்கு வருகை தருகிறார்.
படிக்க: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளை நிறைவேற்றியவர் பிரதமர் மோடி: அமித் ஷா
சிறப்பு விமானத்தின் மூலம் இன்று பிற்பகல் 2 மணியளவில் குவாலியர் விமான நிலையத்திற்கு வருகிறார். அதைத் தொடர்ந்து அவர் டாதியா மாவட்டத்தில் உள்ள பீதாம்பரா பீடத்தில் பிரார்த்தனை செய்ய உள்ளார்.
பின்னர், ஞாயிறன்று அதிகாலை 4 மணியளவில் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான உஜ்ஜைனி மகாகாலேஷ்வர் கோயிலில் ஆரத்தி பூஜையில் பங்கேற்கிறார். மேலும் அங்குள்ள கலபைரவர் கோயிலையும் அவர் தரிசிக்க உள்ளார்.