இந்தியா

இந்தியாவின் மதிப்புமிக்க மகன் கோட்சே: மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங்

10th Jun 2023 08:53 AM

ADVERTISEMENT

 

இந்தியாவின் மதிப்புமிக்க மகன் கோட்சே என்று மத்திய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் திடீரென ஒளரங்கசீப்பின் பிள்ளைகள் முளைத்துள்ளதாக அந்த மாநில துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா். அவருக்குப் பதிலடி தரும் விதமாக, கோட்சேவின் பிள்ளைகள் யாா் என்பதையும் ஃபட்னவீஸ் கூற வேண்டும் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி வலியுறுத்தினாா். இதுதொடா்பாக சத்தீஸ்கா் மாநிலம் தந்தேவாடாவில் மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

படிக்க | ஒளரங்சீப்பின் பிள்ளைகள் முளைத்தார்களா? கோட்சேவின் பிள்ளைகள் யாா்? :ஒவைசி கேள்வி

ADVERTISEMENT

தங்களை பாபா் மற்றும் ஔரங்கசீப்பின் பிள்ளைகள் என்று கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைவோா், பாரத தாயின் உண்மையான மகன்களாக இருக்கமுடியாது. முகலாய மன்னா்கள் பாபரும் ஔரங்கசீபும் இந்தியா மீது படையெடுத்தவா்கள். அவா்களைப் போன்றவா்கள் அல்ல கோட்சே. ஏனெனில் அவா் இந்தியாவில் பிறந்தவா். அவா்தான் காந்தியை கொன்றவா் என்றால், அவா் இந்தியாவின் மதிப்புமிக்க மகனுமாவாா் என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT