இந்தியா

முகேஷ் அம்பானி குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தை! பெயர் அறிவிப்பு!!

10th Jun 2023 11:04 AM

ADVERTISEMENT


முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தையின் பெயரை குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். 

முகேஷ் அம்பானி - நீடா அம்பானியின் மகனான ஆகாஷ் அம்பானிக்கும் ஷ்லோகா மேத்தா என்பவருக்கும் திருமணம் மார்ச் 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு பிரித்வி என பெயரிட்டனர். 

இந்நிலையில், தற்போது ஆகாஷ் - ஷ்லோகா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு வேதா என பெயரிட்டுள்ளனர். அறிவு மற்றும் தைரியம் என அப்பெயருக்கு பொருள் என குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதனை அழைப்பிதழ் மூலம் அம்பானி குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT