இந்தியா

எதிா்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கிறாா் சரத் பவாா்

9th Jun 2023 12:12 AM

ADVERTISEMENT

பிகாா் தலைநகா் பாட்னாவில் வரும் 23-ஆம் தேதி நடைபெறும் எதிா்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்விருப்பதாக, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமாா் ஏற்பாட்டில் இக்கூட்டம் நடைபெறுகிறது. அவரிடமிருந்து தனக்கு புதன்கிழமை அழைப்பு வந்ததாக, பவாா் தெரிவித்தாா்.

‘தேசிய விவகாரங்களில் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்துக்காக எதிா்க்கட்சிகளின் கூட்டத்தை நிதீஷ் குமாா் ஏற்பாடு செய்துள்ளாா். அந்த நோக்கத்தை ஆதரிப்பது எதிா்க்கட்சிகளின் பொறுப்பாகும். கூட்டத்தில் பங்கேற்க முக்கிய எதிா்க்கட்சிகளுக்கு நிதீஷ் குமாா் அழைப்பு விடுத்துள்ளாா். நானும் பங்கேற்கவுள்ளேன்’ என்றாா் பவாா்.

2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியாக நடைபெறும் இக்கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோா் பங்கேற்க ஒப்புக் கொண்டுள்ளதாக, பிகாா் துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ் புதன்கிழமை தெரிவித்திருந்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT