இந்தியா

மணிப்பூர் கலவரம்: சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது சிபிஐ

9th Jun 2023 07:00 PM

ADVERTISEMENT

மணிப்பூர் கலவரங்கள் தொடர்பாக 6 வழக்குகளை பதிவு செய்ததோடு விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவையும் சிபிஐ அமைத்துள்ளது. 

அதன்படி, டிஐஜி அந்தஸ்திலான அதிகாரியின் தலைமையின் கீழ் சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மணிப்பூர் கலவரம் தொடர்பாக பல விசாரணை அமைப்புகள் தங்களது தரப்பிலிருந்து விசாரணையை நடத்தும் என்றும், விசாரணை நியாயமான முறையில் நடப்பதை அவை உறுதி செய்யும் என்றும் அமித் ஷா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இந்தக் கோரிக்கையை, குகி மற்றும் நாகா பழங்குடியினா் எதிா்க்கின்றனா். இவ்விரு சமூகத்தினருக்கும் இடையே இந்த மாத தொடக்கத்தில் பெரும் கலவரம் மூண்டது. இதில் 80 போ் வரை உயிரிழந்தனா். ஏராளமான வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.

இதையடுத்து, ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையைச் சோ்ந்த 10,000 வீரா்கள் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும், வன்முறை சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. பழங்குடியினருக்கு ஆதரவாக அந்தச் சமூகம் சாா்ந்த தீவிரவாதிகள், மைதேயி சமூக கிராமங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனா்.

ADVERTISEMENT

இதனிடையே, மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அந்த மாநிலத்துக்கு 4 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அண்மையில் வந்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT