இந்தியா

27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவில் உலக அழகிகள் போட்டி!

9th Jun 2023 12:29 PM

ADVERTISEMENT


புதுதில்லி: 27 ஆண்டுகளுக்குப் பிறகு உலக அழகிகள் போட்டி மீண்டும் இந்தியாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து உலக அழகி  போட்டிக்கான அமைப்பின் தலைவர் ஜூலியா மோர்லி கூறியதாவது: 

இந்தியாவில் மீண்டும் உலக அழகி போட்டி நடைபெறவுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான தேதிகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஒரு மாதத்துக்கு நடைபெறும் இந்த போட்டியில், 130க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்க உள்ளனர். 

தற்போது, போலந்தைச் சேர்ந்த கரோலினா உலக அழகியாக உள்ளார். 

ADVERTISEMENT

இதுவரை நடைபெற்ற மிஸ் வேர்ல்ட் எனப்படும் உலக அழகிகள் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த ரீட்டா ஃபரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹெய்டன் (1997), யுக்தா முகே (1999), பிரியங்கா சோப்ரா (2000), மற்றும் மனுஷி சில்லர் (2017) ஆகியோர் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளனர்.

உலக அழகி போட்டி இந்தியாவில் கடைசியாக 1996 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்றது. தற்போது 71 ஆவது உலக அழகி போட்டி இந்தியாவில் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT