இந்தியா

அமர்நாத் யாத்திரை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமித் ஷா இன்று ஆலோசனை!

9th Jun 2023 12:14 PM

ADVERTISEMENT

 

ஜம்மு-காஷ்மீரில் தொடங்கவிருக்கும் அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 

இந்தியாவின் புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான அமர்நாத் குகைக் கோயிலில் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் சிவ பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். தன் வாழ்நாளில் ஒருமுறையாவது பனிலிங்கத்தை தரிசிக்க வேண்டும் என்று இந்துக்கள் நினைப்பதுண்டு. 

அவ்வளவு புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை இந்தாண்டு 62 நாள்கள் நிகழ்கிறது. அதன்படி, ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி நிறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடங்கியது. 

ADVERTISEMENT

படிக்க: தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்தது!

இந்நிலையில் அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள், எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஆகியோருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 

கடந்தாண்டு 3.45 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசித்த நிலையில், இந்தாண்டு 5 லங்சத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு, யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT