இந்தியா

அசாமில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

9th Jun 2023 01:06 PM

ADVERTISEMENT

 

அசாமில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், 

நிலநடுக்கமானது இன்று காலை 10.05-க்கு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆகப் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ADVERTISEMENT

டெஸ்பூருக்கு மேற்கு 39 கி.மீ ஆழத்திலும் ஏற்பட்ட, இந்த நிலநடுக்கம் 
குவஹாட்தியின் சில பகுதிகளிலும், மாநிலத்தில் பிற நகரங்களிலும் உணரப்பட்டது. 

படிக்க: அமர்நாத் யாத்திரை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமித் ஷா இன்று ஆலோசனை!

இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்பு மற்றும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. 

முன்னதாக கடந்த மே 29-ம் தேதி ரிக்டர அளவில் 4.4 அலகுகளாக நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT