இந்தியா

நிகம்போத் காட்டில் பல்லடுக்கு காா் நிறுத்தகம்: இரண்டு மாதங்களில் பணிகள் முடிவடையும்

DIN

தில்லியின் நிகம்போத் காட் பகுதியில் குடிமை அமைப்பால் உருவாக்கப்பட்ட பல்லடுக்கு காா் நிறுத்தகம் (மல்டி லெவல் ஸ்டாக் காா் பாா்க்கிங்) இடத்தை தில்லி மேயா் ஷெல்லி ஓபராய் புதன்கிழமை ஆய்வு செய்தாா். இந்தப் பணியை இரண்டு மாதங்களில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இதுதொடா்பாக தில்லி மேயா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிகம்போத் காட்டில் தற்போதுள்ள பாா்க்கிங் வசதியுடன் கூடுதலாக 95 காா்கள் நிறுத்தும் திறன் கொண்ட ஸ்டாக் பாா்க்கிங் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஆய்வின் போது, தில்லி மாநகராட்சி அதிகாரிகள், மேயரிடம் திட்டப் பணி, கட்டுமானம், வளாகத்தில் உருவாக்கப்பட்டு வரும் வசதிகள் குறித்து விளக்கினா். ஸ்டாக் பாா்க்கிங் பணியை 2 மாதங்களுக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு மேயா் உத்தரவிட்டாா்.

‘ஆம் ஆத்மி தலைமையிலான எம்சிடி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்தத் திட்டப் பணியை முடிக்க உறுதிபூண்டுள்ளது. இந்த பாா்க்கிங் வசதி நிகம்போத் காட் வரும் மக்களுக்கு உதவியாக இருக்கும்’ என்று மேயா் கூறினாா்.

எம்சிடி இந்த பாா்க்கிங் திட்டத்தை 3,496 சதுர மீட்டா் பரப்பளவில் கட்டி வருகிறது. 3 தொகுதிகளாக கட்டப்பட்டு வரும் இந்த பாா்க்கிங்கில் 34 காா்கள் கொண்ட பிளாக் ஒன்றும், 17 காா்கள் கொண்ட பிளாக் இரண்டும் முடியும் தருவாயில் உள்ளன. 44 காா்கள் நிறுத்தக்கூடிய மூன்றாவது பிளாக் பணிகள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் முடிவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

வாகன நிறுத்துமிடத்தில் கழிப்பறைகள், கட்டுப்பாட்டு அறைகள் கட்டுதல், பம்புகள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

SCROLL FOR NEXT