இந்தியா

சாட்ஜிபிடி மூலம் வீட்டுப்பாடம் எழுதிய மாணவன்: வரவேற்ற ஏ.ஆர். ரஹ்மான்!

8th Jun 2023 02:17 PM

ADVERTISEMENT


பள்ளி மாணவர் ஒருவர் தனது வீட்டுப் பாடத்தை சாட்ஜிபிடி பார்த்து எழுதியுள்ளார். எனினும், ஆசிரியர் அதனைக் கண்டறிந்த சம்பவம் சுவாரஸியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொழில்நுட்ப உலகில் அடுத்தக்கட்டத்தை நோக்கிய வளர்ச்சியாக செய்யறிவு (செயற்கை நுண்ணறிவு) உள்ளது. தற்போது ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி செய்யறிவு தளம் உலக அளவில் பரவலாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

அறிவியல், இலக்கியம், சமையல், அரசியல் என அனைத்துத் துறை சார்ந்தும் சந்தேகங்களை விளக்கிக்கொள்ளும் வகையிலான தரவுகளை சாட்ஜிபிடி வழங்குகிறது. 

மேலும், கடிதங்கள், கட்டுரைகள் எழுதுவது, இசை பயில்வது, போன்றவற்றுக்கும் ஜாட்ஜிபிடி தரவுகளைக் கொண்டுள்ளது. 

ADVERTISEMENT

இந்நிலையில், 7ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் சாட்ஜிபிடி பயன்படுத்தி தனது ஆங்கில ஆசிரியர் கொடுத்த வீட்டுப் பாடங்களை முடித்துள்ளார்.

எனினும், அவை செய்யறிவு தரவுகள் பார்த்து எழுதியதை ஆசிரியர் கண்டுபிடித்துள்ளார். அவர் அதனை கண்டுபிடித்ததுதான் சுவாரஸியமான ஒன்று. 

பள்ளி மாணவர், சாட்ஜிபிடி பார்த்து எழுதும்போது, சாட்ஜிபிடி பேசும் வார்த்தைகளையும் சேர்த்து அப்படியே வீட்டுப்பாடத்தில் எழுதியுள்ளார். ''நான் செய்யறிவு மொழி பேசுபவன். எனக்கு எந்தவித தனிப்பட்ட எதிர்பார்ப்புகளும் கருத்துகளும் இல்லை'' என சாட்ஜிபிடி சொன்னதையும் சேர்த்து எழுதி ஆசிரியரிடம் வசமாக சிக்கியுள்ளார்.  

இதனை தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஏ.ஆர். ரஹ்மான் எதிர்காலத்துக்கு உங்களை வரவேற்கிறேன் (வெல்கம் டூ ஃபியூச்சர்) என்ற எந்திரன் பட வசனத்தை குறிப்பிட்டு கேலியாக பகிர்ந்துள்ளார். 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT