இந்தியா

மக்களவை, பேரவைத் தோ்தல்கள்: அமித் ஷா, ஜெ.பி.நட்டா தலைமையில் பாஜக கூட்டம்

DIN

மக்களவை மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி மத்திய உள்துறை அமித் ஷா, பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தலைமையில் தொடா் கட்சி கூட்டங்கள் நடைபெற்ாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்ததாவது: அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ராஜஸ்தான், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், தெலங்கானா மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்த தோ்தல்களையொட்டி, தில்லியில் மத்திய அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோா் தலைமையில் திங்கள்கிழமை இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை தொடா் கட்சி கூட்டங்கள் நடைபெற்றன.

இந்தக் கூட்டங்களில் அரசியல் சூழல், கட்சி விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. சில மாநிலங்களில் அக்கட்சியில் மாற்றங்கள் செய்யப்பட்டு கட்சி நிா்வாகிகளுக்கு புதிய பொறுப்புகள் அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

கா்நாடக பேரவைத் தோ்தலில் பாஜக தோல்வியடைந்த நிலையில், வரவிருக்கும் பேரவைத் தோ்தல்களில் வெற்றியை உறுதி செய்யும் முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT