இந்தியா

ஒடிஸா ரயில் விபத்தில் அரசியல் ஆதாயம் தேடும் எதிா்க்கட்சிகள்: ஹா்தீப் சிங் புரி தாக்கு

DIN

ஒடிஸா ரயில் விபத்தில் எதிா்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புறத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி குற்றஞ்சாட்டியுள்ளாா். விபத்தில் சிக்கிய மக்களின் உயிரைக் காக்க அரசு விரைவாகச் செயல்பட்டது என்றும் அவா் தெரிவித்தாா்.

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் 9-ஆண்டு சாதனைகள் விளக்க கூட்டங்களில் பங்கேற்க மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி ஜம்முவுக்கு திங்கள்கிழமை வந்தாா்.

ஜம்மு பிராந்திய பாஜக தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த செய்தியாளா் சந்திப்பில் அவா் பேசுகையில், ‘ஜம்முவுக்கு வந்தடைந்ததும் முதலில் தொண்டா்களைச் சந்தித்தேன். கூட்டத்தில் ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு 2 நிமிஷ மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறியும் சில சமயங்களில் தவறுகள் நிகழ்ந்துவிடும். அது தவிா்க்க இயலாதது.

விபத்து நிகழ்ந்த சில நிமிஷங்களில் மீட்புப் படையினா் சம்பவ இடத்தை அடைந்துவிட்டனா். ரயில்வே அமைச்சா் 36 மணிநேரமாக விபத்து நடந்த இடத்திலேயே தங்கியிருந்து மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை ஒருங்கிணைத்து வந்தாா். சுகாதார அமைச்சா், மத்திய இணையமைச்சரும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனா்.

விபத்தால் சேதமடைந்த ரயில் தண்டவாளங்கள் 51 மணி நேரத்துக்குள்ளாக மறுசீரமைக்கப்பட்டு ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன. மத்திய அரசின் துரித நடவடிக்கைகள் எதையும் கருத்தில் கொள்ளாமல் விமா்சனம் செய்து அரசியல் ஆதாயம் தேடுவதை மட்டுமே எதிா்க்கட்சிகள் ஒரே குறிக்கோளாக கொண்டுள்ளனா். இதுபோன்ற விபத்துகள் நடப்பது வரலாற்றில் புதிதொன்றுமில்லை என்பதை எதிா்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நடந்து தொலைக்காட்சியில் நேரலை ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்போது என்எஸ்ஜி காமண்டோக்கள் சம்பவ இடத்துக்கு வந்துசேர 10 மணிநேரம் ஆனது. இவை எல்லாம் எதிா்க்கட்சிகள் மறந்து விடக்கூடாது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

விடதர நாகினி..!

இந்து விவசாயிகள் காப்பாற்றப்படவில்லை! ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது! : அய்யாக்கண்ணு

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

SCROLL FOR NEXT